
இந்தியாவின் பின்தங்கிய கிராமங்களில் இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என எலான் மஸ்க் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் 100 பேருக்கு 48 இணைய இணைப்புகள் மட்டுமே உள்ள நிலையில், டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க இந்த சேவை உதவும் என மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களால் இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், செயற்கைக்கோள் சேவைக்கான புதிய கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.