
போரினால் உருக்குலைந்து போன காஸாவை மறுகட்டமைப்பு செய்ய, 6 மாத கால அவகாசத்தில் சுமார் 2.45 பில்லியன் டாலர் (ரூ.21,000 கோடி) மதிப்பிலான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமைதிக்கான குழு முன்மொழிந்துள்ளது.
காஸாவை முழுமையாகப் புனரமைக்க இடைக்காலத்தில் சுமார் 35.2 பில்லியன் டாலர்களும், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 71.4 பில்லியன் டாலர்களும் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிதியைத் திரட்ட சர்வதேச நன்கொடையாளர்களை நாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.