
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றால், இந்தியா வெல்ல 90 சதவீத வாய்ப்புள்ளதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ரோகித் மற்றும் கோலி கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் அவர்களின் அனுபவம் இந்திய அணிக்கு மிகுந்த பலமாக அமையும் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.