
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் இயக்கும் 'மஞ்சணத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.
திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் வரை நிகழும் கதையாக உருவாகும் இப்படத்தை 90 நாள்களில் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.