
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
2 மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம், வரும் செப்டம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார், இது அவரது 100-வது படமாகும்.