
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகக் கடலுக்கு அடியிலிருந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
'ஹெரோ கிம் குன் ஒக்' என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரகசிய கடல்வழித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிவது கடினம் என்பதால் அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவம் பீதியில் ஆழ்ந்துள்ளது.