சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடியை 15க்கும் மேற்பட்ட முன்னணி புத்தொழில் நிறுவன அதிகாரிகள் சந்தித்து ஆலோசித்தனர்.
செயற்கைக்கோள் மதிப்பீடுகள் மூலம் சாலைகள் மற்றும் பாலங்களைக் கண்காணிப்பது குறித்த திட்டங்களை புத்தொழில் முனைவோர்கள் பிரதமரிடம் விளக்கினர்.
வளர்ந்து வரும் விண்வெளித்துறை போன்ற பல துறைகளுக்கு மத்திய அரசு என்றுமே ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.