
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து, இலங்கையை 223 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது, இதில் டாம் பென்டன் அதிகபட்சமாக 126 ரன்கள் எடுத்தார்.
356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 29.1 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இங்கிலாந்து வீரர் லியம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.