
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் சரிந்து 72,892 புள்ளிகளில் வர்த்தகமானது.
நிஃப்டி 317 புள்ளிகள் சரிவைச் சந்தித்த நிலையில், ஹிண்டால்கோ, மேக்ஸ் ஹெல்த்கேர் மற்றும் கோடக் வங்கி பங்குகள் அதிக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார காரணிகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும்.