
சென்னையில் வார இறுதி நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.