
கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட வாட்ஸ்அப் டிக்கெட் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்துகிறது.
போக்குவரத்துத் துறை மந்திரி சி.பி. ஜான் ஆகஸ்ட் 6-ம் தேதி இந்த புதிய வசதியையும், 24 மணி நேர கட்டணமில்லா சேவை எண்ணையும் (149) தொடங்கி வைக்கிறார்.
பயண சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய முன்பதிவு முறை மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூரியர் சேவை அறிமுகமாகிறது.