
அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிஐஏ அமைப்பு 1998-2001 காலகட்டத்தைச் சேர்ந்த 71 ரகசிய உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா வலையமைப்பு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சாத்தியமான இலக்குகளாகக் கருதியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவில் எந்த இடத்தில் அல்லது எவ்வாறு தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது என்பது குறித்த குறிப்பிட்ட தகவல்கள் அந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை.