
வட சைப்பிரஸ் கைரேனியா துறைமுகத்தில் இருந்து 267 பேருடன் புறப்பட்ட தனியார் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான அந்தப் படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகு கவிழ்ந்தவுடன் அதன் மேல் பகுதியில் நின்று பயணிகள் உதவிக்காகக் காத்திருந்த நிலையில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று எஞ்சியவர்களை மீட்டனர்.