இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் 3.35 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான ஹோண்டா லிவோ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 78,500 முதல் ரூ. 82,500 வரையிலும், 109.51cc இன்ஜின் கொண்ட மாடல் ரூ. 86,000 முதல் ரூ. 90,500 வரையிலும் விற்கப்படுகிறது.
அதிநவீன 123.94cc PGM-FI இன்ஜின் மற்றும் டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டர் கொண்ட ஹோண்டா எஸ்பி 125 பைக் ஒரு லிட்டருக்கு 60 முதல் 65 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.