
காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் போதிய மழையின்மை காரணமாக விவசாயிகள் சந்திக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், மேகதாது திட்டத்தை ஒத்துழைப்புடன் அணுகுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இரு மாநில மக்களையும் இணைக்கும் பாலமாக காவிரி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பெங்களூரு குடிநீர் தேவைக்கு காவிரி ஆறு உயிர்நாடியாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.