
சென்னை கோட்டத்தில் பெடாபாரியா-நாயுடுபேட்டை இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் (12840) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3, 10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கும், செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்படும்.
மேலும், மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் (01925/01926) சேவை செப்டம்பர் 2 முதல் நவம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.