
கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜெமினி ஓம்னி ஏஐ கருவி மூலம் பயனர்கள் டெக்ஸ்ட், படம், ஆடியோ மற்றும் வீடியோ இன்புட்களைக் கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும்.
இந்த ஏஐ கருவி யூடியூப் ஷார்ட்ஸ் ரீமிக்ஸ் மற்றும் யூடியூப் கிரியேட்டில் கட்டணமின்றி பயன்படுத்தலாம், மேலும் இதில் 360 பிக்சல் முதல் 4கே ரெசல்யூஷன் வரை வீடியோக்களை உருவாக்க முடியும்.
முன்பு 10 விநாடிகள் மட்டுமே வீடியோ உருவாக்க முடிந்த நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட ஜெமினி ஓம்னி மூலம் 40 விநாடிகள் வரை வீடியோக்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.