
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் தம்பதியினருக்கு மாயா மேக்ஸ்வெல் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்ற மகன் உள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல், தற்போது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரில் பெல்ஃபாஸ்ட் வுல்வ்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.