
தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் இருந்த 'முதல்வரின் தாயுமானவர்' என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இத்திட்டத்தை இனி 'பொது வினியோக திட்டத்தின் கீழ்' என மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.