
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை நிலையத்தில், சி.இ.-20 கிரையோஜெனிக் இன்ஜினின் உந்துவிசை திறனை 220 கிலோ நியூட்டனாக உயர்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த இன்ஜின் எல்.வி.எம். 3 - எம்7 விண்வெளி திட்டத்தின் சி32 மேலடுக்கில் பொருத்தப்பட தகுதி பெற்றுள்ளதோடு, இதன் உந்துவிசை 19 டன்னிலிருந்து 22 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப மேம்பாடு மூலம் வணிக ரீதியிலான கனரக தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் அறிவியல் ஆய்வு விண்கலங்களை அதிக எடையுடன் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.