
அரசு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க, 2024-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
புதிய திருத்தத்தின்படி, தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான சிறை தண்டனை 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலும், தனிநபர் அபராதம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும், விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.