
எஃகு உற்பத்தி துறையில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் முழுமையாக ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் நாட்டின் முதல் நேரடி குறைக்கப்பட்ட இரும்பு ஆலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
207 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த முன்னோடித் திட்டத்திற்கு எஃகு அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த ஆலை 2029 ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.