
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் மக்கள் போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஆழ்துழைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்க ஆங்காங்கே சிறு தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.