
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொன்னி அரிசி உள்ளிட்ட சில ரகங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
எத்தனால் தயாரிப்புக்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.