சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் உணவு விநியோகம் மற்றும் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள இயந்திர மனிதர்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க புதிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பொங்கோல் வே சந்திப்பில் நான்கு நீண்ட வானலை அடையாளக் குறி வாங்கிகளைப் (RFID antennas) பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளின் கம்பங்களில் உள்ள பொத்தான்களைத் தனது கைகளால் அழுத்த முடியாத இயந்திர மனிதர்கள், இந்த வானலை வாங்கிகள் மூலம் சமிக்ஞைகளைச் செயல்படுத்திச் சாலையைக் கடக்க முடியும்.