பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 73, சிறையிலேயே கொல்லப்பட முயற்சி நடப்பதாக அவரது மகன்கள் சுலைமான் மற்றும் காசிம் கான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல், அரசு மருத்துவமனையில் சில மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.