
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மல்டி லேன் ஃபிரீ ஃபுளோ எனப்படும் தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டண வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த முறை ஃபாஸ்டேக் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி வாகனப்பதிவு எண் அடையாளம் காணும் கேமரா ஆகிய இரட்டை அடுக்கு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
போதுமான பணம் இல்லாவிட்டாலோ அல்லது செல்லாத ஃபாஸ்டேக் வைத்திருந்தாலோ இருமடங்கு தொகைக்கு மின்னணு அறிவிப்பு அனுப்பப்பட்டு 72 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும்.