
நடிகர் கவின் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 20) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.