
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முதல்வரை அவதூறாக பேசியதாக மார்க்கண்டேயனை கைது செய்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஒத்திவைத்தார்.
கைது செய்வதற்கு முன்னதாகவே இரண்டு முறை தகவல் வழங்கப்பட்டு, அது வீடியோ பதிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் வாதிட்டார்.