
உடல்நலக்குறைவு காரணமாக நடிகை மமிதா பைஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவில் அவர் கலந்துகொள்ளவிருந்த ஓணம் பண்டிகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் முழுமையான ஓய்வில் இருப்பதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததற்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பிரேமலு படம் மூலம் பிரபலமான மமிதா பைஜு, தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.