
அமெரிக்காவின் யூஜின் நகரில் நடக்கும் யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தென் ஆப்பிரிக்காவின் யான்-ஹென்ட்ரிக் ஹேமன்ஸ் 80.50 மீட்டர் தூரத்துடன் தங்கப் பதக்கத்தையும், டொமினிகாவின் அடிசன் ஜேம்ஸ் 73.89 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
19 வயதான ஆஷிஸ் யாதவ், 2016-ல் நீரஜ் சோப்ராவுக்குப் பிறகு உலக ஜூனியர் அரங்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.