
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில், நெல்லை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கிய இந்த 10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.