
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை அணியிலிருந்து நீக்காமல், அவரை வெறும் ஆல்ரவுண்டராக மட்டுமே விளையாட வைப்பது அணியின் வெற்றிக்கு உதவும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
ரோஹித் கேப்டனாக இருந்தால் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.