
ஜனநாயகன் படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்தப் படத்தைத் திரையிடத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என மனுதாரர் சின்னசாமி கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தணிக்கை வாரியத் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 6-க்கு ஒத்திவைத்தனர்.