
கூகுள் பே செயலியில் 6,000 ரூபாய் பரிசு கிடைப்பதாகக் கூறி வரும் போலி லிங்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் குற்றத்தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இத்தகைய லிங்குகளை கிளிக் செய்வதோ அல்லது ஓடிபி எண்களைப் பகிர்வதோ பண இழப்பிற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடி லிங்குகளைப் பெறுபவர்கள் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.