Technology
துபாயில் பு சுனைதா மற்றும் மோசா ரோபோக்களுக்கு வினோத திருமணம்

துபாயில் பு சுனைதா மற்றும் மோசா ரோபோக்களுக்கு வினோத திருமணம்

Daily Thanthi1h
THE BRIEF
1

துபாய் எதிர்கால ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஜி-1 என்ற பிரபல ஹுமனாய்டு ரோபோவான பு சுனைதா, மோசா என்ற பெண் ரோபோவை ஆகஸ்ட் 1 அன்று திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

2

அமீரக பாரம்பரிய கந்தூரா உடையணிந்த பு சுனைதா ரோபோவும், கருப்பு நிற அபாயா அணிந்த மோசா ரோபோவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

3

இந்த ரோபோக்களை உருவாக்கிய பொறியாளர்கள் டாக்டர் அகமது அல் அத்தார் மற்றும் மைதா அல் கைத்தி ஆகியோரின் நிறுவனம், அமீரக பண்பாட்டை விளம்பரப்படுத்தவே இந்த சுவாரசியமான சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளது.