
சென்னையில் அக்டோபர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ள ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கான சின்னம் மற்றும் சீருடையை பி.வி.சிந்து அறிமுகம் செய்தார்.
இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கின்றன, இதில் வெற்றி பெறும் அணி சுவீடனில் நடக்கும் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும்.
டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இதுவரை சுமார் 300 வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளதாக பி.வி.சிந்து பாராட்டு தெரிவித்தார்.