
சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில், மக்கள் பணிகளுக்கான நிதியை விடுவிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதாகப் பேசினர்.
பருவமழை நெருங்கும் சூழலில் வார்டு மேம்பாட்டு நிதி விடுவிக்கப்படாதது குறித்து கவுன்சிலர்கள் ராஜா அன்பழகன் மற்றும் உமா ஆனந்த் ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
முதல்வரின் அறையை மாற்ற நிதி இருக்கும்போது, மக்கள் பணி செய்ய நிதி இல்லையா என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கேள்வி எழுப்பினார்.