
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, சபரிமலை பயணத்தை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோவில் நடை ஆகஸ்ட் 2 மாலை 5 மணிக்கு நிறை புத்தரிசி பூஜைக்காக திறக்கப்பட உள்ளது.
பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், கேட்டாயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.