
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற ஈரான், அமெரிக்க அதிகாரிகளுடன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஈரானின் நிலைப்பாடுகளும் நிபந்தனைகளும் அமெரிக்க தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.