
ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி அதிக மதிப்புடைய நிதி பரிவர்த்தனைகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படுகின்றன.
சேமிப்புக் கணக்கில் ஒரு நிதி ஆண்டில் மொத்தமாக ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேலாக ரொக்கமாக பணம் செலுத்துவது போன்ற தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.
அதிகமான முதலீடுகள் சார்ந்த விபரங்களை ஒருவர் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும், வருமான வரித்தாக்கலின்போது வருமானம் அதனை ஒட்டி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.