
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பணிகளை கண்காணிக்க டெல்லியில் இரண்டு நீர்ப்பாசன அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்திற்கு 12,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், செப்டம்பருக்குள் கேஆர்எஸ் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.