
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்க மியான்மர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2017-ம் ஆண்டு ராணுவ ஒடுக்குமுறை காரணமாக வெளியேறிய அகதிகளின் பட்டியல் வங்காளதேசத்திடம் இருந்து பெறப்பட்டு, ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன் பயங்கரவாத பின்னணி இல்லாதவர்களை படிப்படியாக தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் பணியாற்றி வருகிறது.