
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ரஷியாவின் கரண் கச்சனாவ் பிரான்சின் அட்ரியன் மனரினோவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஜப்பானின் ரெய் செகமாடோவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.