தங்கத்தின் விலை சரிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று ஜெஃபரீஸ் நிறுவனத்தின் கிறிஸ் வுட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீண்ட கால அடிப்படையில் தங்கம் வலுவான முதலீடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ஒவ்வொரு விலை சரிவின்போதும் தங்கத்தைத் தங்கள் முதலீட்டுத் தொகுப்பில் சேர்க்கும் உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.