
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடக்கவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய அணிக்கு காவி நிற ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹாக்கி மைதானத்தின் நீல நிற ஆடுகளத்தில் வீரர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிற மாற்றத்திற்கு விரேன் ராஸ்கின்ஹா, தன்ராஜ் பிள்ளை உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது நிரந்தரமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.