
தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எம்.பி. ராணி ஸ்ரீகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகிறதா என பரிசோதிக்க வேண்டும்.
கால்வாய்களில் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.