
நேபாள வெள்ளத்தில் கைலாஷ் யாத்திரையின் போது காணாமல் போன பெற்றோரைத் தேடும் நிலையில், மாணவி தன்வி மிகுந்த மனவேதனையுடன் நீட் பிஜி 2026 தேர்வை எழுதினார்.
ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற்ற மூன்று மணி நேரத் தேர்வில், ஒன்றரை மணி நேரம் கண்ணீருடன் தேர்வை எதிர்கொண்டதாக அவர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தன்வியின் பெற்றோர் வெங்கட்ராம் மற்றும் அனகா ஆகியோர் 67 பேர் கொண்ட குழுவுடன் யாத்திரை சென்றபோது வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.