
செரா சானிடரிவேர் நிறுவன பங்குகள் அடுத்த 12 மாதங்களில் 22 சதவீதம் உயர்ந்து ரூ.7,384-ஐ எட்டும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 16 சதவீதம் அதிகரித்து ரூ.486 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜூன் 2026 இறுதியில் நிறுவனம் ரூ.943 கோடி பண இருப்பைக் கொண்டுள்ள நிலையில், குழாய்கள் பிரிவில் ரூ.43 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.