
உலகிலேயே முதல் முறையாக 24 காரட் சுத்தமான தங்கத்தால் ஆன நடைபாதை துபாயில் அமைக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்பட உள்ளது.
துபாயின் தெய்ரா பகுதியில் உள்ள தங்க விற்பனை மாவட்டத்தை மெருகூட்ட இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.